இடைவிடா முயற்சி

இடைவிடா முயற்சி –

வெற்றிக்கு ஒரு மந்திரச்சாவி மால் தங்கள் குறிக்கோளை எட்ட இன்னும் இரண்டு அடிகள் வைத்தால் போதும் என்று இருக்கும் நிலையில் கூட , தம் முயற்சியைக் கைவிட்டுவிடும் நபர்கள் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம் ! இன்னும் ஒரு சிறு பணியை முடித்துவிட்டால் , வெற்றிக் கனியைப் பறித்தாயிற்று என்று கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள் . ஆனால் மனம் சோர்ந்து திரும்பி விடுவார்கள் . இன்னோர் அதிர்ஷ்டக்காரர் அவர் விட்ட இடத்திலிருந்து பிடித்துக் கொண்டு , காரியத்தைச் சாதித்து . புகழைத் தட்டிக் கொண்டு போய் விடுவார் !

விடாப்பிடியாக இருந்து ஒரு காரியத்தைச் சாதிப்பது என்பதைத் தொடர் முயற்சி அல்லது மனோதிடம் என்று கூறலாம் . தோல்வியை ஒப்புக் கொண்டு , விட்டுவிடாமல் , முட்டி மோதி வெற்றியை அடைவது என்பது நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது ?

சமீபத்தில் தர முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்டேன் . இப்போது நிர்வாக மேலாண்மைத் துறையில் அடிக்கடி அடிபடும் டோடல் க்வாலிடி மானேஜ்மென்ட் மற்றும் சிக்ஸ் சிக்மா பற்றிய தகவல்கள் அங்கு அலசப்பட்டன . ஒவ்வொரு கட்டத்திலும் இவை எல்லாமே நமக்குச் சாதாரணமாகத் தெரிந்தவைதானே என் நினைப்பு எனக்கு வந்து கொண்டே இருந்தது .

ஒரு வாக்கியம் அழுத்தமாகச் சொல்லப்பட்டது . தொடர்ச்சியான , முடிவே இல்லாத , மேம்பாடு .

இந்த வாக்கியம் என்னை காரியத்தில் குறியாக , விடாப்பிடியாக முடிவு காண்பது என்ற சிந்தனையை மேற்கொள்ள வைத்தது . நானே ஒரு குறிக்கோள் நிச்சயித்து . எப்படி அதை அடைய வே என்று செயல்பட்டேன் போன்ற நிகழ்ச்சிகளை நகை முடியும் ஆனால் நடைமுறையில் எனக்கு அவை தோல்வியாக முடிந்ததை நினைத்துப் பார்த்தேன் . ஆனால் நான் முயறகம் மேற்கொள்ள , மேற்கொள்ள , எதிர்பார்த்த முடிவு வரவில்லை எதிர்பார்த்ததற்கும் கீழான முடிவுகளே எனக்குக் கிடைத்தன . ஆனால் நானோ இடைவிடாது முயற்சி செய் என்று எனக்குள் சொல்லிய கொண்டு இருந்தேன் . முயற்சி செய்தேனே தவிர முடிவு என்னவோ எனக்கு சாதகமாக இருக்கவில்லை . அப்படி என்றால் தொடர் முயற்சியின் பலன் தோல்விதானா ?

நான் எங்காவது தவறு செய்கிறேனா ? ஒரே வேலையைத்தான் திரும்பத் திரும்பச் செய்கிறேன் . எனவே ஒரே முடிவுதான் எல்லா முயற்சிகளிலும் கிடைக்கும் ஏனென்றால் நான்தான் எந்தவித மாற்றமும் செய்யவில்லையோ விடாமுயற்சி என்பது ஒரே வேலையையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பது அல்லவே ? பணியில் வெற்றி அடையும் வரை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும் . அதற்கு இன்னோர் அர்த்தமும் இருக்கிறது . வெற்றி என்பது உங்கள் குறிக்கோளாக இருந்தால் , உங்கள் முயற்சியின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் !

விடாமுயற்சி என்பது நீங்கள் இதுவரை எடுத்து வைத்த அடிகள் , அதில் மேம்பட நீங்கள் எடுத்துக் கொண்டு செயல்பட்ட அணுகுமுறை , பிறகு நீங்கள் உணர்ந்து , மாற்றி அமைத்துக் கொண்ட செயல்கள் எல்லாமே அடங்கியதுதான் . அதையே வைத்து நீங்கள் இறுதியில் அடைகிற வெற்றி முக்கியமானதல்லவா ? தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஆராய்ச்சியாளர் , சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட , அவர் புதிதாக எதையும் கண்டுபிடித்து

அறிவிக்கும் முன்னால் , 1000 தடவைகள் பரிசோதனை செய்வாராம் ஆனால் அந்த 1000 பரிசோதனைகளும் ஒரே மாதிரியாகவா இருந்தன ? இல்லையே ! தமக்குச் சாதகமான முடிவு கிடைக்கிற வரையில் , ஒவ்வொரு முயற்சியும் வெவ்வேறு விதமாக அல்லவா அவர் செய்தார் ? ஒவ்வொரு முயற்சியிலும் மேம்பாடு இருந்தது . ஒன்று போல இரண்டாவது இருக்காது . அதுதான் அவருக்கு வெற்றியைத் தந்தது .

அதேமாதிரி உங்கள் தேர்வுக்கான படிப்பில் , நீங்கள் எப்படி தொடர் முயற்சியை , கடைசி வரை மேற்கொண்டு , வெற்றி அடைய முடியும் ? முதலில் நீங்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று ஒரு முறை அலசிப்பாருங்கள் . எப்படி ஒவ்வொரு படியிலும் மேம்பாடு காண முடியும் என்று சிந்தனை செய்து பாருங்கள் . அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள் , புதிதாக என்ன முறையில் செயல்பட்டால் நீங்கள் விரும்பிய முடிவு கிடைக்கும் என்று சிந்தியுங்கள் .

மறுபடி அலசும்போது , எங்கே , எப்போது , யாருடன் அமர்ந்து படிக்கிறீர்கள் என்று உடல் உழைப்பை மட்டுமே நினைத்துப் பார்க்காதீர்கள் . அப்போது எப்படிப்பட்ட பாடங்களை எந்த வகையில் படித்து நினைவு வைத்துக் கொண்டீர்கள் என்று யோசியுங்கள் . காலையில் படித்தால் , அந்த அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் மனம் பாஸிடிவ் சிந்தனைகளை நினைத்ததா ? அல்லது தோற்றுப் போய்விடுமோமோ என்ற எதிர்மறை எண்ணத்தை நினைத்ததா ? நினைப்புகள் ஒரு முக்கிய இடம் பெறுகின்றன . குறிப்பாக முடிவு வெற்றியா தோல்வியா என்று நிர்ணயிப்பதில் உங்கள் மனத்தில் எழும் சிந்தனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன . எனவே பிற்பகலிலோ , மாலையிலோ படிக்க உட்காரும் போது , இந்த எண்ணங்களை எல்லாம் மனத்தில் கொள்ளுங்கள் . ஏற்கெனவே நீங்கள் கடைபிடித்து வந்த உத்தியிலிருந்து மாறுபட்டு

செய்தால் கூடுதலான பலன் கிடைக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள் உதாரணமாக , நான்கு மணி நேரம் தொடர்ந்து படித்துவிட்டு , இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் , இதையே சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள் , பலன் நன்றாக இருக்கிறதா , மோசமாக இருக்கிறதா ? ஒரே ஒரு வழியில் போனால்தான் வெற்றி கிடைக்கும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . வேறொரு உத்தியை கையாண்டால் , ஒருவேளை இன்னும் கூடுதல் பயன் கிடைக்கலாம் அல்லவா

இடைவிடாத தொடர் முயற்சியை மேற்கொண்டு , அதில் மேம்பாடு கண்டு , முன்பைவிட எளிதாக வெற்றியை அடைய முடியும் . எனவே நீங்கள் இதுவரை செய்து வந்த தொடர் முயற்சிகளில் மாற்றம் கண்டு அதிலேயே ‘ இம்ப்ரூவ் செய்யவும் முடிந்தால் , முடிவு பிரமிப்பைத் தருவதாக இருக்கக்கூடும் . அதையும் முயன்று பார்த்து விடுங்கள் !

அறிவாற்றல் என்ற மரத்திலிருந்து பழங்களைப் பறிக்க உதவும் ஏணிதான் கல்வி . அதுவே பழம் அல்ல . பழத்தைப் பறிக்க ஏணிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான் நீங்கள் கையாள வேண்டிய உத்தி .

Leave a Reply