உங்கள் தேர்வு பயங்களை உதறித் தள்ளுங்கள்

தயார் செய்தல்

தொடர்ந்து உங்கள் ஞாபக சக்தியைப் பயன்படுத்தி , படித்ததை நினைவுக்குக் கொண்டு வர முயலுங்கள் . தேர்வு சமயத்தில் இப்படிப் பழையனவற்றை நினைவு கூர்வது பயன்தரும் . இல்லை என்றால் , கடைசி நேரத்தில் உங்கள் மூளையில் பல பாடங்களை பல தகவல்களை அடைத்து வைக்க முயன்று , அதனால் திணறிப் போவீர்கள் . எனவே மன அழுத்தம் எனப்படும் ‘ ஸ்ட்ரெஸ் பாதிக்கிற அளவுக்கு விட்டுவிடாதீர்கள் . உங்களால் முடிந்த அளவுக்கு அதிகபட்ச முயற்சி செய்யுங்கள் .

ஆரம்பத்தில் முறையாகப் படிக்கத் துவங்கினால் , ‘ ரிலிஷன் எனப்படும் மறுபடி படித்தல் மேற்கொள்ளும் போது எளிதாக இருக்கும் .

தேர்வுக்கு முன்னால் நிறையவே திரும்பப் படித்தல் தேவையாக இருக்கும் . பயந்து போய் விடாதீர்கள் . முடிந்த அளவு ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு படிப்பைத் தொடருங்கள் . ஆனால் அலட்சியமாய் மட்டும் இருந்து விடாதீர்கள்

மூன்று கட்டளைகள் :

முக்கியமான மூன்று கட்டளைகள் என்ன தெரியுமா ?

திரும்பவும் படி , திரும்பவும் படி , திரும்பவும் படி . இது மிகவும் அவசியமான கட்டளை .

குறுகிய காலப் படிப்பு நேரங்களை நான் அதிகம் வலியுறுத்துவேன் . நீண்ட காலப் படிப்பு நேரங்களை விட இது மிக நல்லது . ஒரு நாளில் எந்தக் குறிப்பிட்ட நேரம் உங்களுக்கு மிகவும் ஏற்றது என்பதைக் கண்டறியுங்கள் . என்னைக் கேட்டால் படிப்பதற்கு மிகச் சிறந்த நேரம் என்று குளித்து , காலை உணவு சாப்பிடும் முன் கிடைக்கிற சமயம் இருக்கிறதல்லவா , அதுதான் . ஒரு மணி நேரம் படியுங்கள் . குறித்துக் கொள்ளுங்கள் எழுந்து நின்று கொண்டு , பக்கத்தில் சிறுநடை நடந்துவிட்டு மறுபடி வந்து அமர்ந்து மறுபடி படிக்க ஆரம்பியுங்கள் . இடையே பாலோ , பயோ , காபியோ குடிக்க வேண்டும்போல் இருந்தால் , தாராளமாகக் குடியுங்கள் ,

அட்டவணை :

ரிவிஷன் ‘ எனப்படும் திரும்பப் படித்தலில் , ஒரு கால அட்டவணை போட்டுக் கொண்டு , திட்டமிட்டு , படிக்க உட்காருங்கள் எல்லா படிக்கிற அனுபவங்களிலுமே , நேரத்தைத் திட்டமிட்டுப் பிரித்துக் கொண்டு அதன்படி படிப்பதுதான் சிறந்த அனுபவமாகவும் , பயன் தரும் அனுபவமாகவும் இருக்கும் . எந்தப் பாடத்துக்காவது அதிக நேரம் தேவைப்படுகிற மாதிரி தோன்றினால் , இரண்டு மணி நேரம் அல்லது நாலு மணி நேரம் கடைசியாக ஒதுக்கி வைக்கும்படி சில நாட்களை முன்னாலேயே குறித்து வைத்துவிடுங்கள் .

‘ ரிவிஷன் ‘ செய்வது மிகவும் அவசியம்தான் . ஆனால் அதுவே உங்கள் மனசில் பூரா இடத்தையும் பிடித்துக் கொண்டு விடக்கூடாது . அவ்வப்போது மாற்றம் ஏதேனும் வேண்டி வந்தால் , திட்டப்படி செயலாற்ற முடியாதுதான் . ஆனால் அதற்காக ஒரேயடியாக அட்டவணையே ஆண்டவன் என்று உடும்புப் பிடியாக இருந்து விடாதீர்கள் . ஒரு குறிக்கோள் வேண்டியதுதான் . ஆனால் அதிலிருந்து எப்போதாவது மாற நேர்ந்து விட்டால் , ‘ எல்லாம் போச்சு , திட்டம் போட்டதெல்லாம் வீணாகிப் போச்சு ‘ என்று குமைந்து கொண்டு இருக்காதீர்கள் . இலக்கை அடைய வேண்டும் என்ற உந்துதலும் , அதற்கான முயற்சியும் மட்டும் உங்களிடம் எப்போதும் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் .

மறுபடி படித்தலில் , எல்லாப் பாடங்களுக்கும் சரி சமமாக நேரம் ஒதுக்குங்கள் . ‘ தெரிந்த பாடத்துக்கு எதுக்கு ரிவிஷன் ? என்று அசட்டை செய்யாதீர்கள் , பலவீனமான பாடங்கள் என்றால் தொடாமலே இருந்து விடாதீர்கள்

எங்கே படிப்பது ?

நிம்மதியாக , யார் குறுக்கடும் தொந்தரவும் இல்லாத இடமாகத் தேர்ந்தெடுத்து அங்கே உட்கார்ந்து படியுங்கள் , தீவிரமாகப் படிப்பதற்கு ஏற்ற இடம் ஒன்றை அடையாளம் கண்டுகொள்வது அவசியம் . ஆனால் , எங்கே உட்கார்ந்து படித்தால் கவனம் சிதறாமல் படிக்க முடியுமோ , அங்கே உட்கார்ந்து படியுங்கள் . இதுதான் முக்கியம் .

பஸ்ஸில் உட்கார்ந்து படிப்பது எப்படி ?

சிறு சிறு அட்டைகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் . அதில் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டால் , பயணத்தின் போது எளிதாக எடுத்துப் படிக்கலாம் . அல்லது சிறுசிறு பாயின்ட்டுகளை ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டால் , பாக்கெட்டிலிருந்து எடுத்து அவ்வப்போது படிக்கலாம் . நான் வண்ண வண்ண பேனாக்களை உபயோகித்து எட்டுக்கால் பூச்சி மாதிரி வரைபடம் வரைந்து வைத்துக் கொண்டு , மறுபடி படிக்க திட்டம் இட்டு வந்திருக்கிறேன் .

எட்டுக்கால்பூச்சி வரை படமா ?

ஒவ்வொரு தலைப்பையும் அங்கங்கே வரைபடத்தில் குறித்துக் கொள்ளுங்கள் . இதை எட்டுக்கால் பூச்சி வரைபடம் ( ஸ்பைடர் கிராம் ) என்பார்கள் , தலைப்புகள் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தம்

உள்ளதாக இருக்கின்றன என்று முன்யோசனையோடு தயாரியுங்கள் . திரும்பப் படித்து முடிக்கும் போது , எல்லா தலைப்புகளையும் படித்து விட்டீர்களா என்று சரிபாருங்கள் . நீங்கள் போட்ட ஐடியாவின்படி எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டீர்களா என்று சோதித்துப் பார்க்க இந்த வரைபடம் உதவும் .

Leave a Reply