உங்கள் நினைவு ஆற்றலை , உத்திகளுடன் , எப்படி பத்து மடங்கு பெருக்குவது ?உதாரணம்

உதாரணம் : 1

நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க எண்ணுகிறீர்கள் என்றால் , உங்கள் மனத்தில் படம்பிடித்தது போல் அதை நினையுங்கள் , நீங்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் , உங்கள் வண்டியில் அப்போது உங்கள் தகப்பனார் உங்களைக் கூப்பிட்டு , வழியில் கடையிலிருந்து பால் , வெண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு ஜூஸ் எல்லாவற்றையும் வாங்கிவரச் சொல்கிறார் . நீங்களோ ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் . குறித்து வைத்துக் கொள்ள முடியாது . உடனே என்ன செய்கிறீர்கள் ? நினைவு வங்கியில் அதைப் போட்டுவிடுகிறீர்கள் . இதைக் கற்பனையான ஒரு படத்துடன் தொடர்பு படுத்திக்கொண்டால் போதும் . எப்படி என்று பாருங்கள் : 27 1 என்ன படம் தெரியுமா ? ஒரு பசுமாடு , பெரிய பால் ‘ கேன் ‘ மீது நின்று கொண்டிருக்கிறது . ( பால் நினைவில் இருக்கிறதா ? ) அந்தப் பசுவின் வாயில் வெண்ணெய்க் கட்டி . ( வெண்ணெய் நினைவுக்கு வருகிறதா ? ) அந்தப் பசுமாடு நிற்கும் வயல்வெளியில் புல் முளைத்திருக்கவில்லை . அதற்குப் பதில் பீன்ஸ் முளைத்திருக்கிறது ! ( பீன்ஸ் நினைவுக்கு வரவேண்டுமே ? ) பசுமாடு ஆரஞ்சு வர்ணத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . ( ஆரஞ்சு ஜூஸ் நினைவுக்கு வந்துவிடும் ! ) முயன்று பாருங்கள் . இது பலருக்கும் பயன்பட்டிருக்கும் உத்தி .

உதாரணம் : 2

எதையாவது மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் , அதை நீங்கள் மறக்கவே முடியாத ஏதாவது ஓர் இடத்தின் அருகில் வைப்பதுதான் . ஜியோமிதி பெட்டியைத் தேர்வு மன்றத்துக்கு மறக்காமல் கொண்டு போக வேண்டும் . நீங்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய சாவி , அல்லது மனிபர்ஸ் …. இதுபோன்றவற்றை எங்கே வைப்பீர்களோ , அங்கே வையுங்கள் . பர்சை எடுக்கும்போது ஜியோமிதி பாக்சையும் எடுத்துச் செல்லுவீர்கள் ! உங்களுக்கும் தெரியும் . ஆனால் ஒரு வாரத்துக்கு இந்த இவை எல்லாம் மிக எளிதான உத்திகள்தாம் என்று எனக்கும் தெரியும் ;

அணுகுமுறையை நீங்கள் மேற்கொண்டு பாருங்கள் . நிறைய வித்தியாசம் உங்களுக்கே தெரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *