உங்கள் நினைவு ஆற்றலை , உத்திகளுடன் , எப்படி பத்து மடங்கு பெருக்குவது ?

உங்கள் நினைவு ஆற்றலை , உத்திகளுடன் , எப்படி பத்து மடங்கு பெருக்குவது ?

இந்த அத்தியாயத்தை நான் எழுதுவது எதற்கு என்று தெரியுமா ? நினைவாற்றல் உத்திகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லத்தான் சரியாகக் கடைப்பிடித்தால் , இந்த உத்திகள் மிகுந்த சக்தி வாய்ந்தவையாக இருக்கும் . உங்கள் நினைவு ஆற்றலைப் பல மடங்கு பெருக்கும் . பயப்பட வேண்டாம் . அவை உங்கள் மனத்தை ஒன்றும் பாதித்து விடாது . இவை எல்லாமே , நினைவு வைத்திருப்பது எப்படி என்று கற்றுத்தரும் வித்தைகள்தாம் .

நினைவு ஆற்றல் உத்திகள் வெகு எளிதானவை . அதிலும் என்ன சிறப்பு என்றால் , அவற்றைச் சில நிமிடங்களிலே செய்து விடலாம் . நினைவு ஆற்றல் உத்திகள் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பவை . அந்தக் காலத்துச் சொற்பொழிவாளர்கள் , தங்கள் நீண்ட பிரசங்கங்களை நினைவில் வைத்திருக்கக் கையாண்ட உத்திகள்தாம் .

நினைத்துப் பாருங்கள் :

எப்படி ஒருவர் இரண்டு மணி நேரச் சொற்பொழிவை , நினைவு உத்திகள் ஏதுமில்லாமல் நினைவு வைத்திருக்க முடியும் ? என்னால் நிச்சயமாக முடியாது . உங்களாலும்தான் . ஆனால் உத்திகள் இருந்தால் , அது எல்லோராலும் சாத்தியமே . உங்கள் நினைவு ஆற்றல் எத்தனை மோசமானது என்று நீங்கள் நினைத்தாலும் சரி , ஓர் இரண்டு மணி நேரச் சொற்பொழிவை . நினைவு ஆற்றல் உத்தியோடு , உங்களால் நினைவு வைத்திருக்க முடியும் .

டீவியில் நினைவாற்றல் நிபுணர்கள் தங்கள் திறமையைக் காண்பிப்பதையும் சுமார் 400 பேரின் தொலைபேசி எண்களை ஒரு கேட்டுவிட்டு அடுத்த கேட்டிருப்பீர்கள் .

நீங்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்கிற மாதிரி , சில உத்திகளை நான் இப்போது சொல்லுகிறேன் . ஒரு சிறு வாக்கியத்தில் , பொதுவாக , என்ன என்று விவரிக்கிறேன் . இந்த நினைவு ஆற்றல் உத்திகளை நான் சொல்லும்போது , நீங்கள் வழக்கமாகக் கையாளும் ஞாபகசக்தி முறைகளை மறந்துவிடுங்கள் . இங்கே கற்பனை ஆற்றல்தான் முக்கியம் . நினைவு ஆற்றல் உத்திகளுடன் பயிற்சி பெறுவது சுவாரசியமான அனுபவம்

ஒரு பாடத்தை நினைவு வைத்துக் கொள்ள நீங்கள் ஏதேனும் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் . அந்தப் பெரிய பட்டியலில் உள்ள அத்தனை பெயர்களையும் , நினைவு ஆற்றல் உத்தியைப் பயன்படுத்தி , வெகு எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் . முதல் பெயர் அல்லது அம்சத்தோடு அடுத்த பெயர் அல்லது அம்சத்தைத் தொடர்பு படுத்துங்கள் . உங்கள் மனத்தில் தங்கி இருப்பதற்கான அளவில் , புதுமையாக , நீங்கள் முதல் வரியிலுள்ள பெயரையும் இரண்டாம் வரியிலுள்ள பெயரையும் இணைக்க வேண்டும் .

பெரிய கட்டுரைகளைக்கூட இந்த வழியில் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ளலாம் . ஒவ்வொரு பாராவுக்கும் ஒரு முக்கியச் சொல்லைக் குறித்து வையுங்கள் . பிறகு அந்த முக்கியச் சொல்லை அடுத்த பாராவின் முக்கியச் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கொள்வது போல் அடுத்த முக்கியச் சொல்லைக் குறியுங்கள் . அந்த முக்கியச் சொல்லை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால் , அது எந்த பாராவுக்குத் தொடர்பு உடையது என்று உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடும் . எவரும் கடைபிடிக்கலாம் . கீழே இரண்டு உதாரணங்கள் தந்திருக்கிறேன் . வாழ்க்கையில் இதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *