உங்கள் வெற்றியை நீங்களே பாராட்டுங்கள் !

உங்கள் வெற்றியை நீங்களே பாராட்டுங்கள் !

சிறிய சிறிய வெற்றிகளுக்கு , சிறுசிறு பரிசுகள் நீங்களாகவே கொடுத்துக் கொள்ளலாம் . தவறில்லை . உதாரணமாக , ‘ ஜியோமிதியில் வேலைகளை ஆரம்பிப்பேன் இன்று ஆனால் கிராஃப் போட்டு முடிந்ததும் ஒரு கோககோலா குடிப்பேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள் . ஜியோமிதியை எத்தனை வேகமாக முடிக்கிறீர்கள் என்று நீங்களே வியப்படைந்து போவீர்கள் !

உங்களுக்குப் பிடித்த பாடத்திலிருந்து ஆரம்பியுங்கள்

இருப்பதிலேயே கடினமான பணி , வேலையைத் தொடங்குவதுதான் , ஆனால் எது பிடித்த பாடமோ , அதிலிருந்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள் . அப்படியானால் நிச்சயம் பணியை ஆரம்பித்து விடுவீர்கள் . ஆரம்பித்து விட்டால் போதும் , அந்த வேகத்திலேயே அடுத்தது . அடுத்தது என்று பணியைத் தொடர்ந்து கொண்டே போவீர்கள் .

பதிவுசெய்யுங்கள் :

நான் 5 ” x3 ” அட்டைகளில் , ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பதிவு செய்து வைத்துக் கொள்வேன் . அட்டையின் மேல் இடது ஓரத்தில் அன்றைய தேதியைக் குறிப்பேன் . அது சிவப்பு மையால் எழுதப்பட்டிருக்கும் . மற்றதெல்லாம் பென்சிலால் எழுதியிருப்பேன் . அது விவரமான குறிப்பாக இருக்கும் . அன்று மாலை , குறிப்புகள் சேர்ந்துபோய் , அந்த அட்டையில் முழு விவரங்களும் அடங்கியிருக்கும் . அன்றைக்கு முழுதும் நான் என்ன செய்தேன் என்பதை அந்த அட்டையிலிருந்து நான் எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் . தா ம் தொழில்நுட்பமும் உங்களின் 48 மணி நேர வேலைக்கு உதவக்கூடும் . en . நேரத்தைச் சரியாகச் செலவிடுவதில் மிகச் சாதாரண கடிகாரம் கூட உங்களுக்கு உதவ முடியும் . உங்களுக்குப் பிடித்த வேலையில் அதிக நேரம் செலவழிப்பீர்கள் , பிடிக்காத வேலையில் மிகக் குறைந்த நேரம் செலவழிப்பீர்கள் ! அவ்வப்போது உங்கள் கைக்கடிகாரத்தையோ , சுவர்க்கடிகாரத்தையோ பார்த்தீர்களானால் , உங்கள் நேரத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு பணிகளை முடிப்பது எப்படி என்று புரிப்து கொள்வீர்கள் . தொடக்கத்தில் , குறித்த நேரத்திலிருந்து அப்படி இப்படி அதிகமோ குறைவாகவோ இருந்தால் பரவாயில்லை . நீங்கள் 5×3 ‘ அட்டையில் அதிகப் பணிகள் அல்லது குறைந்த பணிகள் குறித்து வைத்திருக்கலாம் . அந்த அனுபவம் தரும் அறிவில் , ஒரு நாளைக்கு 48 மணி நேரம் பணி செய்ய என்ன மாதிரியான திட்டம் அல்லது குறிப்புகளை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது புரிந்துவிடும் .

‘ நீங்கள் நினைவில் வைத்திருப்பது எவ்வளவு , அல்லது உங்களுக்கு என்ன தெரியும் என்பதைக் காட்டுவதல்ல கல்வி . உங்களுக்கு என்ன தெரியும் , என்ன தெரியாது என்ற வேறுபாட்டைக் காட்டுவதுதான் கல்வி ‘ என்பார் அனடோல் பிரான்ஸ் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *