உந்து சக்தி

நமக்கு முன்னால் எந்தவித வேலை காத்திருக்கிறது என்று யதார்த்தமாக எண்ணி அதற்குத் தயாராக இருப்பது . உங்களுக்குள்ளேயே சவாலைச் சந்திக்கும் உங்கள் திறமையை மனத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து தேர்வு குறித்த உங்கள் கவலைகளை விரட்டுவது ; இவை இரண்டுமே உங்கள் படிப்பாற்றலுக்கு உந்துசக்தியாக , தூண்டுதலாக இருக்க முடியும்

* முடிவு எப்படி இருக்கும் , எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் அல்லது எந்த கிரேடு கிடைக்கும் என்று நினைத்துப் பார்க்காமல் , துணிந்து உங்கள் படிப்பிலேயே கவனம் செலுத்துங்கள் . இப்படிப் படிப்பது உங்களுக்காகத்தான் , உங்கள் நன்மைக்காகத்தான் வேறு யார் நலனுக்காகவும் அல்ல என்பதைத் திடமாக உணருங்கள் .

எந்தப் பாடமாவது , பகுதியாவது உங்களுக்கு அச்சம் தருகிற மாதிரி இருந்தால் அதைத் தவிர்த்து விடவேண்டும் என்று நீங்கள் நினைக்காதீர்கள் . அதைச் சிறுசிறு பகுதியாகப் பிரித்து வைத்துப் படித்துப் பாருங்கள் . அந்த மாதிரி , புரியாததைப் புரிந்து கொள்கிற சாதனையை ஒவ்வொரு முறை செய்யும் போதும் , உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம் . தப்பே இல்லை ! உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வளரும் .

* உங்களுக்கு எது சரிப்பட்டு வருகிறது ; எது சரிப்பட்டு வரவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் . சரிப்பட்டு வராததை ஒதுக்கி வையுங்கள் . ஏனென்றால் எத்தனையோ மாணவர்கள் , உபயோகம் இல்லாத , ஏதுபயன் தராத , முறைகளில் எல்லாம் பாடத்தைப் படித்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .

ஏதோ கவலை கொஞ்சம் தெரிந்திருக்கிறது . இதை விட்டு வைக்க வேண்டுமா அவர்களுக்கு இருக்கலாம் உண்மையான நன்பனுடனோ , நாலைந்து பேர் சேர்ந்துகொண்ட ஒரு குழுவாகவோ அமர்ந்து படிப்பதால் எளிதாகப் புரியும் என்று நீங்கள் நினைத்தால் அந்த முறையையும் கையாளலாம் . நூலகத்தில் உட்கார்ந்து படித்தால் இன்னும் நல்லது என்று தோன்றினால் , அப்படியும் செய்யலாம் . எந்தச் சூழல் உங்கள் படிப்புக்கு ஏற்றது என்பதை நீங்கள்தான் தீர்மானம் செய்ய வேண்டும்

ஒரு கெடுபிடியான அட்டவணை போட்டுக் கொண்டு கடுமையாக அதன்படியே நடப்பதைவிட அட்டவணை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் , உங்களால் பலன் பெற முடியும் என்றால் அதைக் கடைப்பிடிப்பது நல்லது .

வேறொரு மாணவர் என்ன செய்கிறார் என்று ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்காதீர்கள் . நீங்கள் எப்படித் திட்டம் போட்டுப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் .

‘ தேர்வுக்காக எதற்குத் தனியே படிக்க வேண்டும் ? உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததைத் தானே விடையாக எழுதப் போகிறீர்கள் ? பின் எதற்காகத் தேர்வுக்கு முந்தைய இரவு எல்லாப் பாடங்களையும் தலைக்குள் குத்தித் திணிக்கிறீர்கள் ? ” என்று சொல்லுவதுண்டு !

அப்படி இருந்துவிட முடியாதுதான் . அது அலட்சிய சுபாவம் என்று கணிக்கப்படும் . தேவையானவற்றை மீண்டும் படிக்கவும் , படித்தததை மறுபடி மனத்தில் கொண்டு வந்து அசைபோடவும் , தேர்வுக்கு முந்தைய இரவைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை .

Leave a Reply