ஒரு நாளில் 48 மணிநேரம் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒரு நாளில் 48 மணிநேரம் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

எக்கச்சக்க வேலை . இருக்கிற நேரமோ குறைவு . எனவே இடைவிடாத பரபரப்பு

இதை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம் . இருக்கிற வேலையை ஒன்றும் குறைத்துக் கொண்டுவிட முடியாது . செய்துதான் தீரவேண்டும் . ஆனால் அதை எல்லாம் செய்து முடிக்கத் தேவைப்படும் நேரத்தை நீங்கள் எப்படியாவது அதிகரிக்க முடியும் ! சமீபத்தில் , இங்கிலாந்திலிருக்கும் லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தினார்கள் . அதில் நாம் ஒரு பணிக்காகச் செலவிடும் ஒவ்வொரு மணி நேரத்திலும் , 30 நிமிடங்களே உண்மையான வேலைக்காகச் செலவிடுகிறோம் . மீதி 30 நிமிடங்களை வீணாக்கிவிடுகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . அதுமட்டுமல்ல ; பெரும்பாலானவர்கள் சிறிது சிறிது நேரமே பணி செய்து , இடை இடையே காத்திருக்கிறார்கள் . அல்லது கவனத்தை வேறு பக்கம் திருப்புகிறார்கள் , அல்லது இடை இடையே இடைவேளை கொடுத்து விடுகிறார்கள் ! ஒரு மணிநேரத்தில் செய்ய வேண்டிய வேலைக்கு நீங்கள் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டால் , ஒவ்வொரு நாளும் நீங்கள் 48 மணி நேரம் வேலை செய்ய முடியும் !

அப்படியானால் , ஒரு நாளில் 48 மணி நேரம் இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி ? வியப்படையாதீர்கள் . அது ஒன்றும் அத்தனை கடினமான விஷயமல்ல . பல வேலைகள் சார்ந்த மோசமான

பழக்கங்கள் நம் உள் மன ஆழத்தில் இருப்பவைதான் . அதை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் , முதலில் நீங்கள் அவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . கீழ்க்கண்ட ஐந்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் ,

1. வேலையைச் சிறுசிறு பகுதியாகப் பிரியுங்கள் :

பெரிய வேலையை வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பதைவிட , அதைச் சிறு சிறு அம்சங்களாகப் பிரித்துவிட்டால் , செய்வது எளிது . உதாரணமாக , நீங்கள் நாளை கணிதம் போட வேண்டும் என்றால் , மறுநாள் நிச்சயம் வந்துவிடும் ; கணிதம் போட்டிருக்க மாட்டீர்கள் ! நீங்கள் என்ன காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்ப்பீர்கள் ! கணிதம் கடினமான பாடம்தான் . சில சமயம் போர் அடிக்கவும் செய்யும் . இரண்டு , மூன்று பேர் சேர்ந்து உட்கார்ந்தால் பரவாயில்லை . ஆனால் இதையே நீங்கள் என்னென்ன வேலை இதில் அடங்கியிருக்கிறது என்று பிரித்துப் போட்டுவிட்டீர்களானால் ஒரு பிரச்னையும் இல்லை . அ . அல்ஜீப்ரா பி . ஜியோமிதி , சி . கால்குலஸ் , டி . டிரிக்னாமெட்ரி . உங்களுக்குள்ளே இப்போது சொல்லிக் கொள்ளுங்கள் . ‘ நாளை நான் எளிதான ஜியோமிதியை முதலில் முடித்துவிடுவேன் . மறுநாள் வந்ததும் , முதலில் ஜியோமிதியைப் போட்டுவிடுவீர்கள் . ஏனென்றால் அதில் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே ! அப்புறம் என்ன ? கணிதம் ‘ ரிவிஷனை ஆரம்பித்துவிடுவீர்கள் !

2. சாதிக்கக் கூடிய குறிக்கோள்களை வைத்துக் கொள்ளுங்கள்

பணிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டீர்களா ? ‘ இதோ அல்ஜீப்ராவை முடித்துவிடுவேன் என்று சொல்லாதீர்கள் . அது வெறும் பேச்சு சாதாரண விஷயமல்ல . பணி தொடங்காமல் இருக்க பத்து காரணங்களைச் சொல்லுவீர்கள் . அதைவிட எளிதான கிராஃப்கள் , சார்ட்டுகள் போன்றவற்றைச் சொல்லுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *