ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாக இருக்கத் திட்டமிடுங்கள்

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாக இருக்கத் திட்டமிடுங்கள்

நீங்கள் வைத்திருக்கும் குறிக்கோள் பற்றிச் சிந்தியுங்கள் . எப்போதுமே நீங்கள் அவற்றை அடைய முடிகிறதா ? நீங்கள் நினைத்த சமயத்தைவிட அதிக காலம் எடுத்துக் கொண்டீர்களா ? எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண் என்று எப்போதாவது நினைத்து , பாதியிலேயே உங்கள் குறிக்கோளை எல்லாம் கைவிட்டது உண்டா ? உங்கள் எதிர்பார்ப்புகளில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் . நம் வாழ்க்கை வெறுமையான சூழலில் இல்லை . நம் எதிர்பார்ப்புகளை முன்னதாகவே தீர்மானித்து வைத்து விடுகிறோம் . அதனால் நம்மில் யாரேனும் வெற்றி பெற அல்லது தோல்வியுற அந்த எதிர்பார்ப்புகள் அடிப்படையாக அமைந்து விடுகின்றன .

பிறர் நம்மை எந்தக் காரணங்களை வைத்து எடை போடுகிறார்கள் என்பதையும் , நாமே நம்மை எப்படி எடை போடுகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது . நம்மில் பலர் எந்த விஷயத்திலுமே நூறு சதவிகித வெற்றியை அடைந்து விடுவதில்லை ஆனாலும் நமது குறிக்கோள் நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுவது . இதற்கு நமது பழைய அனுபவங்கள் உதவலாம் . அடுத்த தடவை அந்த அனுபவம் நமக்குச் சிறப்பாகச் செயல்படக் கை கொடுக்கும் .

வெற்றிக்கு :

ஒவ்வொருவரும் தத்தமது காரணத்தை , அது தரும் தாக்கத்தை வலுவாக்கிக் கொள்ள முடியும் . அந்த வலுவோடு உங்கள் பணிகளை வெற்றிப் பாதையின் முடிவு நோக்கிச் செய்து முடித்தால் , செய்கிற பணிகளில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும் . பணி முடிகிறபோது சாதனை புரிந்த பூரிப்பும் இருக்கும் . எந்தப் பணியையும் மேற்கொள்ளும் முன் உங்கள் லட்சியம் என்ன , உங்கள் குறிக்கோள் , எட்டவேண்டிய இடம் எது என்று தனித்தாளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் . பணி முடிந்ததும் உங்கள் எதிர்பார்ப்புகளோடு , முடிவுகள் எந்த அளவுக்கு ஒத்துப் போயிருக்கின்றன என்று தெரியும் .

இந்த வருடத் தேர்வைச் சந்திக்க :

இதை நீங்கள் படிக்கும் மாதம் டிசம்பர் என்றால் , உங்கள் லட்சியத்தை அடைய இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன . நீங்கள் செய்ய வேண்டிய 5 அம்சங்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன ,

நாளைய வேலைக்கு இன்றே திட்டமிடு !

படுக்கச் செல்லு முன் , தினசரி , நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பு தயாரித்துக் கொள்ளுங்கள் . அதிக முக்கியமான பணிகள் இதில் அடங்க வேண்டும் .

நேரத்தை ஒதுக்கு :

குறிப்பிட்ட தினங்களில் செய்ய வேண்டிய முக்கியப் பணிகளுக்கு நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்குங்கள்

நல்லநேரம் :

காலையிலா , மாலையிலா – எது உங்களுக்குச் சிறப்பாகச் செயலாந்த ஏற்ற நேரம் ? சவாலான , மிகவும் கடினமான பணியை இந்தச் சமயத்தில் ஏற்று முடியுங்கள்

தடங்கல் வேண்டாம் :

தொலைபேசியை எடுத்து வைத்து விடுங்கள் . கதவைச் சாத்தில் கொண்டுவிடுங்கள் . ( வேண்டுமானால் , கதவில் ‘ தொந்தரவு செய்யாதீர்கள் ! ” என்றொரு போர்டைத் தொங்கவிடலாம் ! )

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாக இருக்கத் திட்டமிடுங்கள் :

படிக்கத் தொடங்குவதற்கு முன்னால் அந்த நாள் முழுதும் வெற்றிகரமாக இருக்க , திட்டம் போட்டுக் கொள்ளுங்கள் . இந்த நாள் என் வாழ்க்கையின் மகத்தான நாள் ! ‘ என்று அணுகுமுறை எண்ணம் உங்களிடம் இருத்தல் வேண்டும் .

” படிப்பது எதற்கு ? சம்பாதிக்க . சில குறிப்பிட்ட வேலைகள் கிடைக்க வழி ? சில தேர்வுகளை எழுதித் தேறியவுடன் . அப்படியானால் இந்தத் தேர்வு முறையை அலட்சியப்படுத்தி விடாமல் எதிர்கொள்ளத்தான் வேண்டும் . வேலை கிடைக்க வேறொரு ஏணி கிட்டுமானால் , படிப்பு மறைந்து போய்விடும் . எல்லோருமே முட்டாளாக இருப்பார்கள் ” என்கிறார் ச.எம் . ஃபார்ஸ்டர் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *