சரியான பணியைச் செய்யுங்கள் ; சரியான முடிவைப் பெறுங்கள் !

சரியான பணியைச் செய்யுங்கள் ; சரியான முடிவைப் பெறுங்கள் !

ஒவ்வொரு நாளும் , தாம் எதிர்காலத்தில் என்னென்ன சிறந்த பணிகளைச் செய்ய விரும்புகிறோம் என்று பலரும் சொல்லுவதை நான் கேட்பதுண்டு அவர்கள் பேசுவார்கள் , பேசுவார்கள் , பேசிக் கொண்டே இருப்பார்கள் ,

” சரி , அப்படி என்ன பிரமாதமாகச் செய்து விடப் போகிறீர்கள் எதிர்காலத்தில் ? ” என்று நான் கேட்டு விட்டால் , நீங்க இப்படி என்னைக் கேட்பீர்கள் என்பதை நான் நினைத்தே பார்க்கவில்லை என்பார்கள் . உங்களுக்கும் தினசரி இப்படிப்பட்ட அனுபவம் இருந்திருக்கலாம் .

பேசுவதற்கும் செயலில் காட்டுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு , அதைவிடப் பெரிய வேறுபாடு , நீங்கள் தினசரி செய்யும் பணியும் , அதற்கு மொத்தமாகக் கடைசியில் கிடைக்கிற முடிவும் .

உங்கள் சக்தியைத் திரட்டிக் குறிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள்:-

உங்கள் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு முனைப்படுத்திச் செயல்பட்டால் , நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் பெருவாரியானவற்றைச் செய்து முடித்து விடலாம் . ஏனென்றால் மற்ற வழிமுறைகளை விட இது எளிது . பல ஆனால் முடிவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை உங்களால்

திட்டமிட முடியாது . பணியின் முடிவில் தெரிவதுதான் பயன்கள் வானவில்லின் கோடியில் இருக்கும் ஒரு பானைத் தங்கம் மாதிரி

முடிவுகள் கடுமையான வேலைக்கும் முயற்சிக்கும் பின்பு விளைபலை நம்மில் பெரும்பாலோருக்கு , சாதகமான முடிவுகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை . அதற்காக வேலை செய்தால் வேண்டியிருக்கிறது .

எனவே , முடிவுகள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் , எந்த எந்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு , அவற்றைச் செய்து முடிக்க வேண்டும் . இந்த வகையில் , நீங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே சாதித்திருப்பீர்கள்

விவரங்களுக்காக நேரத்தை வீணாக்காதீர்கள் :

பெரும்பாலானவர்களுக்கு விவரங்கள் என்றாலே கசப்பு , சிக்கலான சமாசாரங்களில் தலையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் , உடம்பில் அழுக்குப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிற கூட்டத்தினர் . அதிகத் தொல்லைகள் வேண்டாமே என்று நாசுக்காக ஒதுங்கிவிடக் கூடியவர்கள் . அவர்கள் செய்கிற பணிகளில் , தானாகக் கிடைக்கிற தகவல்கள் கிடைத்தால் அது போதும் அவர்களுக்கு , அதற்காகச் சிரமப்பட மாட்டார்கள் . ஆனால் இந்த ‘ விவரங்கள் ‘ உங்களுக்கு மிகவும் உதவும் . நீங்கள் விரும்பும் முடிவை அடைய முடியும் என்பதோடு , குறைந்த நேரத்தில் , குறைந்த முயற்சியில் அது சாத்தியமாகும் . இன்றைய போட்டா போட்டிச் சூழலில் , ( தேர்வுக்குப் படிக்க உட்காருவதற்கு முன்பு ) விவரங்களை நீங்கள் தொகுத்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் , திணறிப் போய்விடுவீர்கள் கஷ்டப்படுவீர்கள் . நீங்கள் நினைத்த கால அவகாசத்தில் உங்களால் படித்து முடிக்க முடியாது .

எண்ணத்தையும் செயலையும் இரண்டாகப் பிரியுங்கள்

எப்போது நீங்கள் எண்ணம் அல்லது திட்டமிடலை உங்கள் செயலிலிருந்து பிரித்து விடுகிறீர்களோ , அப்போது செய்ய வேண்டிய பணி எளிதாகிவிடுகிறது . நீங்கள் படிப்பதற்கும் , ரிவைஸ் செய்வதற்கும் அட்டவணை ஒன்று தயார் செய்து விட்டாலே , பாதி வேலை முடிந்துவிட்ட மாதிரிதான் !

முக்கியமான வேலையை முதலில் செய்யுங்கள்

இன்றைக்கு இருக்கிற போட்டியுலகில் , வெற்றியோடு விளங்க வேண்டுமானால் , முக்கியமான வேலைகளை முதலில் முடித்துவிட வேண்டும் . அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தரும் பணி எதுவோ , அதை முதலில் செய்து முடியுங்கள் . உங்களை அதிகம் வேலை வாங்கி , ஆனால் குறைந்த பலனையே தரும் பணிகளுக்குக் கொஞ்ச நேரம் ஒதுக்கினால் போதும் . அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளின் வேலைப் பட்டியலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும் , எவை எவை முக்கியமான பணிகள் என்று அதற்குத் தனியாக நேரம் ஒதுக்கி அந்த வேலையைச் சிறப்பாக முடிக்கப் பாருங்கள் .

இன்றே , இங்கே , இப்பொழுதே ;

எதிர்காலத்தை எண்ணிக் கனவு கண்டு , தேர்வுகளில் பிரமாதமாக மதிப்பெண்கள் பெற நினைப்பதில் தவறில்லை ஆனால் அதை நனவாக்க , இன்றைக்கு நீங்கள் குறியாக இருத்தல் அவசியம் . காலையில் எழுந்து படிக்க ஆரம்பிக்குமுன் , என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள் . அட்டா , இன்றைக்கு என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வியுடன் நாளைத் துவங்கினீர்களானால் , உங்கள் பாடு திண்டாட்டம்தான் . உங்கள் அன்றாடப் பணிகளை ஒரு திட்டத்தோடு துவங்குங்கள் . அப்புறம் முடிவுகள் பிரமாதமாகவே அமைந்துவிடும்

‘ படிப்பதை ஒரு கடமையாக எண்ணாமல் , உங்கள் மகிழ்ச்சிக்குத் தரப்பட்ட வாய்ப்பாக எண்ணிக் கொள்ளுங்கள் . பிற்கால சமுதாயத்துக்கு நீங்கள் தரப்போகும் நன்மைக்காக என்று நினையுங்கள் ‘ என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .

Leave a Reply