தேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை

தேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை

இடைவேளை கொடுங்கள் . நம் மூளை இருக்கிறதே , அதுவும் தசை போன்றதே . இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருக்கும் போது , அதற்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது . தொடர்ந்து அதை வேலை வாங்கினால் , அது களைத்துப் போய்விடும் . எனவே இடைவிடாது அதை இயங்க வைக்காதீர்கள் . கொஞ்சம் விளையாட்டுகள் , கொஞ்சம் சமுதாய சேவைகள் என்று மாற்றம் கொடுங்கள் . ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பணியிலிருந்தும் கவனத்தைச் சற்றே இறக்கி வையுங்கள் . ஓய்வு நேரத்திலும் கூட , தேர்வுகள் பற்றியும் , பாடங்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல .

உறக்கம் பிரச்னையா ?

பாடங்களை ரிவைஸ் செய்து முடித்துவிட்டு , உடனே படுக்கப் போய்விடாதீர்கள் . கொஞ்சம் இடைவெளி விடுங்கள் . வேறு ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டு , மனசை இலேசாக ஆக்கிக் கொண்ட பிறகு படுக்கைக்குப் போகலாம் . இல்லாவிட்டால் தலைக்குள் ஏதோ குடைந்து கொண்டே இருக்கும் . நீங்கள் உறக்கம் வராமல் தத்தளிக்கும் இன்சோம்னியா’க்காரராக இருந்தால் , நீங்கள் தூக்கம் வர எத்தனை சிரமப்படுகிறீர்களோ அத்தனை சிரமமும் இன்னும் அதிகமாகவே இருக்கும் . இருபது நிமிட இடைவெளியில் , எதிர்மறை எண்ணங்களை எல்லாம் பற்றி எதுவும் நினையாமல் , பிறகு படுக்கச் செல்லலாம் . அப்படியும் உறக்கம் வரவில்லையானால் பத்து நிமிடங்களுக்குப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு அதிகம் உடல் களைப்படையாதவாறு ஏதானும் பணியில் ஈடுபட்டுவிட்டு , பிறகு படுக்கச் செல்லலாம் வேறு அறைக்கு உங்கள் படுக்கையைத் தற்காலிகமாக மாற்றிக்கூடப் பார்க்கலாம் .

எதைத் தவிர்க்க வேண்டும் ?

நள்ளிரவு வரை படிப்பதை காபி குடிப்பதை களைத்துப்போன தசைகள் , தூக்கம் வருகிற தூண்டலைச் செய்யும் எனவே மிகச் சாதாரண , எளிய உடற்பயிற்சி ஏதாவது செய்யலாம் . தேர்வுக்குப் படிக்கிற நபர் நீங்கள் . உங்களுக்கு இல்லாத சலுகையா ? சும்மா நல்ல ஆகாரம் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டுங்கள் சத்தான உணவாக மட்டும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் ! படுக்கப்போகுமுன் , சூடான சாக்லேட் டிரிங்க் கிடைத்தால் குடியுங்கள் . சிலர் ஹார்லிக்ஸ் என்பார் சிலர் பூஸ்ட் என்பார் . எது உங்கள் சுவைக்கு ஏற்றதோ , அதைத் தாராளமாகக் குடியுங்கள்

Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *