தேர்வுக்கு செல்லும் போது என்னவெல்லாம் செய்யலாம்

பதில்களைத் தயார் செய்து பாருங்கள்

பழைய கேள்வித் தாள்களை ஆதாரமாகக் கொண்டு , எப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள் என்ற வாகத்தின் பேரில் , பதில்களைத் தயார் . செய்து பாருங்கள் . குறைந்தபட்சம் , பதில்களின் சாராம்சம் என்ன என்பதையாவது எழுதிப் பாருங்கள் எந்த அளவுக்கு விவரமாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு விவரமாக இருந்தால் போதும் . ஆனால் நினைவில் வைத்துக் கொள்கிற அளவுக்குச் சுருக்கமாக இருந்தால் உங்களுக்கு நல்லது . சுருக்கமாக என்றால் எளிதாக என்றும் கொள்ளலாம் , திட்டமிட்டபடி பதில்களை எழுதிப் பாருங்கள் . ரொம்பக் குழப்பமாக இருந்தாலும் சரி ரொம்பவே எளிதாக இருந்தாலும் சரி , திட்டத்தை மாற்றிக் கொண்டு இன்னும் திருத்தம் என்ன செய்யலாம் என்று தோன்றுகிறதோ , அதன்படி பதில்கள் எழுதிப் பாருங்கள் .

நேரம் முக்கியம் !

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் பதில்களை எழுதப் பயிற்சி செய்ய நீங்களே இந்தப் பதில் எழுத இவ்வளவு நேரம்தான் எ அளவுக்கு நேரம் குறித்துக் கொண்டால் போதும் . அதற்குள் பதில் எழுக முடித்துவிட்டால் , உங்கள் நேரக் கணிப்பு சரியானதாக இருந்துவிடும் .

படபடப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்

இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் சுயநலக்காரராக இருந்தாலும் அதில் தவறு இல்லை தேர்வு காலத்தில் எத்தனைக்கு எத்தனை ரிலாக்ஸ்ட் ஆக இருக்கிறீர்களோ , அத்தனைக்கு அத்தனை நல்லதுதான் சட்டை , பேன்ட்டுகளைத் துவைத்துப் போட வேனும் போல் தோன்றுகிறதா , செய்யுங்கள் ‘ சிநேகிதனே , சிநேகிதனே கேட்கணும் போல் தோன்றுகிறதா ? கேளுங்கள் . அந்த ஐந்து நிமிட ரிலாக்சேஷன் உங்களுக்குப் புத்துணர்ச்சியும் , உற்சாகமும் தர முடிந்தால் , அது உங்கள் நல்லதுக்குத்தான் என்று நினையுங்கள்

நன்றாக உறங்குங்கள் !

தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் நன்றாகத் தூங்குங்கள் . எல்லாம் படித்து விட்டீர்களா என்று நினைத்துப் பாருங்கள் உங்கள் தேர்வு நடக்கும் அறை எண் நினைவு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் !
உங்கள் தோல் நேரம் எப்போது என்றும் கட்டாயம் நினைவில் தோவுக்குப் புறப்படும் முன்னால் , உணவு சாப்பிட்டு விட்டே முந்தைய நாள் இரவிலேயே எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு விடுங்கள் . அப்போது உறக்கம் தானாக வரும் ‘ நிம்மதியா இருக்குது ! ” என்று உணர்வீர்கள் . தேர்வன்று காலையில் , எளிமையான , சிறுசிறு உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள் ரிலாக்ஸ் செய்ய இவை உதவும்

இவ்வளவுதானா ? இன்னும் இருக்கிறதா ?

இன்னும் கொஞ்சம் இருக்கிறது . குறிப்பாக , அமைதியாக இருங்கள் ,

தேர்வின்போது பயந்துபோய் விடாதீர்கள் ,

* தேர்வு அறையில் , கண்காணிப்பாளர் என்ன சொல்கிறார் என்று கூர்ந்து கவனியுங்கள் .
* ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . *
* வினாத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகளைக் கவனமாகப் படியுங்கள் .
* வினாக்களை ஒன்றுவிடாமல் கவனமாகப் படியுங்கள் . பயந்து போய்விடக்கூடிய மாணவராக இருந்தால் , முதல் தடவையாகக் கேள்வியைப் படிக்கும் போது குழம்பிப் போய் விடுவார் . இது தேவையற்ற பயம் . ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் . மறுபடி படியுங்கள் . நீங்கள் ஏற்கெனவே தயார் செய்த பதில்களுக்கான கேள்விகளை வார்த்தைகள் மாற்றிக் கூடக் கேட்டிருப்பார்கள் . *
* எந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் எழுத உங்களால் முடியும் என்று முதலில் பார்த்துக் கொள்ளுங்கள் .
* கொடுக்கப்பட்ட நேரத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
* ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . அதற்கான விடையை எழுதி முடிக்கும் வன அதிலேயே மிகக் கவனமாக இருங்கள் .
* ஒரு திட்டம் வைத்துக் கொள்ளுங்கள் . பதிலை எப்படி எழு வேண்டும் , என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்க வேண்டு என்று கவனம் செலுத்துங்கள் .
* ஒரு கேள்விக்குப் பதில் எழுத அதிக நேரம் ஆகும்

உங்களுக்குத் தோன்றினால் , அடுத்த கேள்விக்குப் போய்விடுவது உசிதம் .
* எப்போதும் , எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டுமே அதை எழுதிவிடுங்கள் . தேர்வுகளில் எல்லாம் , இத்தமை கேள்விகளுக்கு விடை எழுதியாக வேண்டும் என்று இருக்கும் இல்லாதபோதும்கூட , அவை மதிப்பெண்கள் பெறுகின்றன அவற்றுக்கு பதில்கள் அவ்வளவு சரியாக போது . வா குறைந்த கேள்விகளுக்கு மிகச்சரியாக பதில் சிரமப்படுவதைவிட இது மேலானது .
* ஒரு கேள்விக்கான விடையைப் பாதியோடு நிறுத்தியிருந்தால் முடித்துவிடலாம் . பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது . அதை

அடிப்படையான விஷயங்களைப் பற்றி இதுவரை சொல்லியாயிற்று இனி , உணர்ச்சி பூர்வமான விஷயங்களை எடுத்துச் சொல்லுகிறேன் அவை தேர்வுகளை எதிர் கொள்ள உங்களுக்கு உதவும் .

ராபர்ட் கிரீன் இங்கர்சால் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

” மனம் எனும் விளக்கை , சினம் வந்து ஊதி அணைத்து விடுகிறது . ஒரு தேர்வின் முக்கியமான கேள்வி உங்கள் முன் எழும்போது அமைதியாக இருங்கள் . படபடப்பைத் தவிர்த்து விடுங்கள் . ‘ ‘

Leave a Reply