தேர்வுக்கு தயார் செய்யும் முறைகள்

என்னென்ன வகையில் விடைகள் எழுதலாம் ?

எப்படி எழுதினால் மதிப்பெண்கள் போடுவார்கள் என்ற வழிவகை பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு தேர்வுக்கும் இது அவசியம் .

* எத்தனை கேள்விகளுக்குப் பதில்கள் எழுத வேண்டியிருக்கும் ?

* தேர்ச்சி பெற அல்லது தேர்வு பெற , எத்தனை கேள்விகளுக்கும் பதில் எழுத வேண்டும் ?

* எத்தனை கேள்விகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி வரும் ?

* எதைப் பற்றிய கேள்விகளாக இருக்கும் என்று ஊகிக்க முடியுமா

* பதில்கள் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் ? சிறிய கட்டு போலவே இருக்குமா ? சிறிய பதில்களாக இருக்குமா ? அல்ல மல்ட்டிபிள் சாய்ஸ் எனப்படும் பல கேள்விகளிலிருந்து – பதில்களை மட்டுமே எழுதும் வகையா ?

* தேர்வு எத்தனை நேரம் ?

* தேர்வு மன்றத்துக்கு எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத் போகலாமா ?

* முன் இருந்த ஆண்டுகளில் இருந்த வடிவத்திலேயேதான் தேர்வு இருக்குமா ?

* முந்தைய தேர்வுகளின் கேள்வித்தாள்களை வைத்துக் கொள் பழகிப் பார்க்க முடியுமா ?

*கையோடு கொண்டு போகும் புத்தகங்கள் என்ன ? ஆசிரியர் , பேராசிரியர் அல்லது விரிவுரையாளரின் ஆலோசனை என்ன ?

* அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் . நல்ல மதிப்பெண்கள் பெற என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆலோசனை தரலாம் . கையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தில் ஏதானும் ஆலோசனைகள் குறித்து வைத்திருக்கலாம் .

பழைய தேர்வுக் கேள்விகள் :

குழுவாக அமர்ந்து , பழைய தேர்வுக் கேள்விகளை அலசிப் பார்த்து விடைகள் காண்பது நல்ல உத்தி . பல சமயங்களில் , கேள்விகள் தயாரிப்பவர்கள் வருடா வருடம் ஏதாவது சிறு மாறுதல்களையே கேள்விகளில் அறிமுகப்படுத்துவார்கள் , பெரும்பாலும் , கேள்விகளை ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு , அதை வேறு வேறு வார்த்தைகளாகக் கேட்கும் வழக்கமும் உண்டு எனவே பழைய கேள்வித் தாள்களை வருடா வருடம் வைத்துக் கொண்டு அலசுவது நல்ல உத்தி , கேள்விகள் தயாரிப்பவர்கள் உங்களிடமிருந்து எந்த மாதிரி பதில்களை எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரியும் . உங்களுக்கும் அதற்கு ஏற்ற மாதிரி உங்களைத் தயார் செய்து கொள்ள எளிதாக இருக்கும் .

முந்தைய தேர்வுகளின் கேள்வித் தாள்கள் , பல்கலைக்கழக அல்லது பள்ளி நூலகங்களில் இருக்கும் பல வருடங்களின் கேள்விகள் தொகுப்பைப் பார்த்தால் , எந்த விஷயத்தைப் பற்றி வருடந்தோறும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பது புரியும் . சுமார் ஐந்து வருடக் கேள்வித்தாள்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு பார்த்தால் , ஒரே விஷயத்தைப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம் . பிறகு அடுத்த விஷயத்துக்குச் செல்லலாம் .

விரிவுரைகள் :

தேர்வுக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வருகிற போதே , சில சமயங்களில் வயிற்றைக் கலக்கும் . தெரிந்ததை எல்லாம் தொகுக்க வேண்டும் . புரிந்து கொண்டதை எல்லாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் . மறுபடி படித்துப் பார்க்க வேண்டும் விரிவுரைகளின் போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் குறிப்புகள் உங்களுக்கு உதவும் . பாடத்தைப் புரிந்து கொள்ளுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் , இப்படிப்பட்ட விரிவுரைகள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் .

படித்தல் :
உங்கள் வேலைப் பளுவை வாரா வாரத்துக்குப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் . கூடுதலாகப் படிக்க வேண்டியதைக் கூடிய மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் . தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டிய நிலை வருகிறபோது , உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததை மறுபடி படித்துப் பார்க்க வேண்டும் . அவ்வளவுதான் . புதிதாக , ஏராளமான பாடங்களைப் படிக்க வேண்டியிருக்காது .

குறிப்புகள் :

நீங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரித்து வைத்திருந்தால் , நீங்கள் தேர்வுக்கு ஓரளவு தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்துவிடும் .படிக்கும் போது , குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் திட்டப்படி படித்து முடிக்கிற வேளையில் , மறுபடி படித்துப் பார்க்க வேண்டிய குறிப்புகள் உங்களை நினைவுறுத்தும் . குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளும்போது , விரிவாகவே எழுதுங்கள் . அப்போதுதான் கொஞ்ச நாள் கழித்துப் படித்துப் பார்க்கும் போதும் அதைப் புரிந்துகொள்ள முடியும் . கருத்தரங்குகளிலும் , விரிவுரைகளின் போதும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் குறிப்புகள் சரியானவைதானா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் . அப்போதுதான் மறுபடி படிக்கும்போது அவை பயனுள்ளதாக இருக்கும் .

ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் ;

தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண்கள் வாங்க , ஆரம்பத்திலிருந்தே உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது . கள் படிப்பது உங்களுக்குப் புரிகிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் . நீங்கள் படிக்கும் போதே தேவையான குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் படித்தது என்ன என்பதை உங்கள் வார்த்தைகளாலேயே விளக்கிச் சொல்லுங்கள் . தொடர்ச்சியாகப் படியுங்கள் . நீண்ட இடைவெளிவிட்டுப் படிக்காதீர்கள் . அப்போதுதான் என்னென்ன முடியும் . படித்தோம் என்பதைச் சட்டென்று எளிதாக நினைவுக்குக் கொண்டு வர முடியும்

Leave a Reply