தேர்வு சமய நடுக்கங்கள்

தேர்வு சமய நடுக்கங்கள்

தேர்வு சமயங்களில் வரும் நடுக்கங்களில் இருந்து வெளியே வாருங்கள் . உங்கள் படிப்பில் கவனம் செலுத்தி , நினைவு ஆற்றலைப் பயன்படுத்தி வெற்றி அடையுங்கள் ! இரவு பகல் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு , தேர்வு மன்றத்தை அடையும் சமயத்தில் , படித்ததெல்லாம் சடாரென்று தலையிலிருந்து மறைந்து விடுவதைப் போன்ற துன்பம் வேறு எதுவுமில்லை . பயமும் நடுக்கமும் உங்களை முழுதும் விழுங்கியிருக்கும் . உங்கள் மூளை வேலை செய்வதையே அடியோடு நிறுத்தியிருக்கும் !
மன இயல் தத்துவத்தில் இந்த நிலைமையை நினைவு சார்ந்த நிலை என்பார்கள் . நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்களோ , அந்த நிலைமைதான் நீங்கள் எத்தனை தூரம் நினைவு வைக்க முடியும் என்பதை நிர்ணயிக்கிறது . படிக்கும் போது உங்கள் மனநிலை ஒரு மாதிரியாக இருந்திருக்கலாம் . நீங்கள் படித்ததை மறுபடி நினைவுக்குக் கொண்டு வருவது சிரமமாக இருக்கலாம் . மனநிலை ஆரோக்கியமாக இருந்தது என்றால் , சில வேளைகளில் படித்தது மெல்ல மெல்ல நினைவுக்கு வருவது சாத்தியமாகலாம் . பதட்டத்துடன் நீங்கள் இருக்கையில் , உங்கள் மூளை சரியாக எதையும் பதிவு செய்து கொள்ளாது . எதிர்மறையான நினைவுகளை , உங்களை நீங்களே தோல்வியடையச் செய்கிற மாதிரியான எண்ணங்களை முதலில் ஒதுக்குங்கள் .

அப்படிப்பட்ட நினைப்புகள் எழுந்தாலும் அவற்றை வெற்றி கண்டுவிடுவேன் என்று ஓர் உறுதியான எண்ணம் கொள்ளுங்கள் . உங்கள் திறமையை எடைபோடப் போவது எந்தத் தனிமனிதரும் அல்ல , தேர்வு சமயத்தில் கேட்கப்படும் சில கேள்விகள்தாம் என்பதை நிளைவு வைத்துக் கொள்ளுங்கள் . நிலை அந்த யும் க்குக் மாக நீங்கள் இப்போது ஒரு மாணவனாகவோ , மாணவியாகவோ இருந்து என்ன சிரமங்களை , சோதனைகளை அனுபவிக்கிறீர்களோ அதை எல்லாம் தேர்வு மன்றத்தில் கண்காணிப்பாளரும் ஒரு காலத்தில் அனுபவித்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள் . அவரும் ஒரு மனிதப் பிறவிதான் என்று நீங்கள் நினைக்கும் போது , கண்காணிப்பாளர் பற்றிய உங்கள் எண்ணம் மாறும் , அவர் மீது கோபப்படவோ , அவரை நினைத்து பயப்படவோ தேவையே இல்லை என்று உங்களுக்குப் புரிந்துவிடும் . அவரை உங்கள் நண்பராக அல்லது , வினாத்தாள் பற்றிப் பெரிதாக ஏதும் அறியாத அப்பாவி நபராக நினைத்துக் கொள்ளுங்கள் .

இப்போது உங்கள் கண்களை மெல்ல மூடி , உங்கள் மூச்சில் கவனம் செலுத்துங்கள் . வயிற்றுத் தசைகளைப் பயன்படுத்தி , நெஞ்சிலிருந்து அல்லாமல் , ஒரு நீண்ட மூச்சை இழுங்கள் . மெதுவாகவும் , சீராகவும் மூச்சை வெளிவிடுங்கள் . ஒவ்வொரு தடவை இப்படி நீண்ட மூச்சை வெளியிட்டதும் சற்று இடைவெளி கொடுங்கள் . மெதுவாக மூச்சை இழுத்து வெளியிடும் போது , இருபுறமும் கைகளைத் தொங்க விடுங்கள் , உங்கள் டென்ஷன் எல்லாம் அந்தக் கைகள் வழியாகவும் , பாதங்கள் வழியாகவும் வெளியேறிவிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள் , அதுபோல , மனசுக்குள் , உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் டென்ஷன் வெளியேறிப் போவதாகக் கற்பனை செய்யுங்கள் . தேர்வுக்கு முன்னால் , தசைகளைத் தளரவிட்டுப் பயிற்சி ஏதும் செய்திருந்தால் , மேற்படி பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் .

நீங்கள் இனி எழுதலாம் என்று எண்ணித் தயாராகும்போது , மெதுவாக , அமைதியாக , நளினமாக மறுபடி எழுத ஆரம்பியுங்கள் .

அலைஸ் வெலிங்டன் ரோலின்ஸ் இப்படிச் சொல்லுகிறார் :

ஒரு சிறந்த ஆசான் என்பவர் , தம் மாணவர்களிடம் எத்தனை கேள்விகள் கேட்கலாம் , அதில் அவர்களுக்கு எத்தனை கேள்விகளுக்கு விடை தெரியும் என்று நினைத்திருப்பதைவிட , தமக்கே பதில் சொல்லத் தெரியாத எத்தனை கேள்விகளைக் கேட்கத் தாண்டுகோலாக இருக்கிறார் என்பதன் மூலமே அறியப்படுத்துகிறார்

Leave a Reply