நீங்கள் விரைந்து கற்க வழி இருக்கிறது !

நீங்கள் விரைந்து கற்க வழி இருக்கிறது !

விரைந்து கற்க முடியுமா ? அப்படி என்றால் ? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் , விரைந்து கற்க முடிவது என்பது , புதிய தகவல்களை விரைவாக அப்படியே உள்வாங்கிக்கொண்டு , அதை மனத்தில் தங்க வைத்துக் கொள்ளுவதுதான் .

உங்களுக்குள் இருக்கும் திறமைகளை முழுதும் பளிச்சிடச் செய்வது இதில் அடங்கும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகக் கற்கிறோம் . விரைந்து கற்பதும் அவற்றில் ஓர் உத்தி மாதிரிதான் . நம்முடைய பாணிக்கு ஏற்ற மாதிரி கற்பதும் இதில் அடங்கும் நமக்குப் பழக்கமான வழியில் படிக்கும்போது , கற்பது எளிதாகிறது . வேகமாகிறது . இதைத்தான் விரைவாகக் கற்பது என்கிறோம் .

நம் மனித மூளையை இடது மூளை , வலது மூளை என்று , இரண்டாக இருப்பதாகச் சொல்லுவார்கள் . மொழிகள் கற்க , கணிதம் போட , சிந்தனை செய்ய விஷயங்களை அலச – எல்லாம் இடது மூளைதான் பயன்படுகிறது வலது மூளையின் பங்கு என்ன ? தாளம் , இசை , நேரில் காணும் காட்சிகளின் தாக்கம் , வர்ணம் , வடிவம் எல்லாம் பதிவு செய்வது . இரண்டு மூளைகளுமே இப்படிக் குறிப்பிட்ட பணிகளுக்கு என்று இருந்தாலும் , எல்லா இயக்கங்களிலும் இரண்டு பகுதிகளுமே சம்பந்தப்பட்டிருக்கின்றன . விரைவான முறையில் கற்க , முழு மூளையையுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இங்கே கூறப்படும் செய்தி

என்று எப்போதாவது எட்டுவித புத்திசாலித்தனங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

1. மொழி சார்ந்த புத்திசாலித்தனம்

2. சிந்தனை சார்ந்த – கணிதம் சார்ந்த புத்திசாலித்தனம்
.
3. பார்வை சார்ந்த புத்திசாலித்தனம்

4. உடல் சார்ந்த புத்திசாலித்தனம்

5. இசை சார்ந்த புத்திசாலித்தனம்

6. ஒருவருக்கொருவர் இடையேயான பரிமாறலில் புத்திசாலித்தனம்

7. தன்னையே சார்ந்த புத்திசாலித்தனம்

8. இயற்கையான புத்திசாலித்தனம்

இப்படி எட்டு வகைகளையும் கண்டறிந்து சொன்னவர் ஹார்வர்ட் பேராசிரியர் ஹோவர்ட் கார்ட்னர் . விரைந்து கற்றலில் இந்த எட்டு வகைகளையுமே பயன்படுத்துவதால் , கற்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது .

ஒரே நாளில் இந்த விரைவு முறையை அறிந்து கொள்ளுவது சாத்தியமல்ல . அதை வசமாக்குவது ஒரு நாளில் வந்து விடக்கூடியதல்ல . நேரமும் , முயற்சியும் கொண்டே அந்தக் கலையைக் கற்கமுடியும் இருந்தாலும் , சுருக்கமாக அவற்றின் விளக்கங்களை இங்கே தருகிறேன் . இந்த ஆறு படிகளும் நீங்கள் விரைந்து கற்பதை சாத்தியமாக்கும் .

1. மனத்தைத் தூண்டிவிடுங்கள் :

எந்த அளவுக்கு மனத்தைத் தூண்டிவிட்டு , உந்துதல் ஏற்படச் செய்கிறீர்களோ , அந்த அளவுக்கு உங்கள் படிப்பு ஆர்வம் கூடும் . இத்தனை நேரத்துக்குள் இத்தனை படித்து விடுவது போன்று ஒரு குறிக்கோளுடன் படிக்க ஆரம்பியுங்கள் .

2.தகவல்களைச் சேகரிப்பது :

உங்கள் அணுகுமுறையிலேயே உங்களுக்குத் தேவையான தகவல்களையும் , விவரங்களையும் சேமியுங்கள் மூன்று வகைகளில் , இரண்டாவது வகை , நாம் இந்த மாதிரி சேகரித்த தகவல்களை நெறிப்படுத்தலாம் . மூன்று வகைகளையுமே , தக்கவாறு உபயோகிக்கலாம் . முதல்வகை பார்ப்பது , கேட்பது : மூன்றாவது வகை : பங்குகொண்டவற்றிலிருந்து அறிவது . இதில் எந்த வகை உங்கள் அணுகுமுறைக்கு ஏற்றது என்று பாருங்கள் .

3. பொருளைப் புரிந்துகொள்வது :

நீங்கள் படித்துப் புரிந்து கொள்ளும் போது , அதை நினைவு வைத்துக் கொள்வது எளிதாகிறது . ஆனால் புத்திசாலித்தனத்தில் இதுவே முக்கியமானது . அதனால் இதை எப்படிப் பெருக்கிக் கொள்வது என்பதில் கவனம் செலுத்துங்கள் .

4. நினைவுக்குக் கொண்டு வர :

படித்ததை நினைவுக்குக் கொண்டு வர முயலுங்கள் . அதற்கான நினைவு ஆற்றல் உத்திகளைக் கையாளுங்கள் . முன்பு கூறிய தொடர் அல்லது இணைத்துப் பார்க்கும் உத்தி , எண்கள் , வடிவம் சார்ந்த உத்தி முதலிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் . உங்கள் நினைவாற்றல் திறன் உச்ச கட்டத்தில் இருக்கையில் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டால் , வெற்றி கிடைக்கும் .

5.உங்களுக்குத் தெரிந்ததை வெளிக்காட்டுவது :

நீங்கள் படித்ததை நன்றாகப் புரிந்து கொண்டிருகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள் . நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை , எந்தச் சமயத்திலும் எந்த இடத்திலும் கூறத் தயாராக இருங்கள் . அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் , நீங்கள் உண்மையாகவே சிரத்தையுடன் படித்திருக்கிறீர்கள் , படித்ததைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

6. படித்ததை நினைத்துப் பார்ப்பது :

கற்பது என்பது தொடர்ச்சியான பாடம் . நாம் நம் தவறுகளிலிருந்துகூட கற்கிறோம் . புதிதாகக் கற்றதையும் , விரைவாகக் கற்றதையும் சுய பரிசோதனையில் அலசுவது நல்லது . கற்ற பிறகு யோசித்துப் பார்ப்பதும் , அதையே திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து ‘ இதைப் படித்தோம் ; இப்படிப் புரிந்துகொண்டோம் ‘ என்று அலசிப் பார்ப்பதும் நல்லது . ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . விரைந்து கற்றல் முறை உங்களுக்கு உகந்ததாக இருக்குமானால் , அதில் உங்களுடைய இயற்கையாகக் கற்கும் முறையை அனுசரித்துக் கற்றுக் கொள்ளுங்கள் . அதுதான் முறையானது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *