பழக்க வழக்கங்கள்

பழக்க வழக்கங்கள்

உங்களைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் உங்கள் தேவை என்ள , நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்கள் , எதைச் செய்ய உங்களைத் தடுப்பது எது ? விரும்புகிறீர்கள் ? தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் நான் என்ன ஊகிக்கிறேன் தெரியுமா ? ‘ ‘ சிலபஸ் – பாடத்திட்டம் – அதிகம் . ‘ ‘ ” நேரம் போதாது ! ” | ” என்னால் அதைச் செய்ய முடியவில்லை . ” ” எனக்கு ஞாபகசக்தி போதாது ! ‘ நான் சொல்லப் போகும் பதில் வேடிக்கையாக இருக்கலாம் . ஆனால் அதுதான் உண்மை . நீங்கள் நினைத்தைச் சாதிக்க முடியாமல் உங்களைப் பிடித்து இழுப்பது வேறு எதுவுமல்ல ; வேறு யாருமல்ல நீங்களேதான் நாம் பிறக்கும்போதே . நம்முடைய வாழ்வின் போக்கை மாற்றியமைத்துக் கொள்ளும் சக்தியுடன்தான் பிறந்திருக்கிறோம் . நம் கண் முன்னாலேயே , சாதாரண மனிதர்கள் எல்லாம்கூட ஹீரோக்கள் அளவுக்கு உயர்ந்து சாதனையாளர்களாக மாறியிருப்பதைக் கண்டிருக்கிறோம் . இது எப்படி சாத்தியமாயிற்று ? அவர்கள்

வாழ்க்கையில் அவர்களை அறியாமலே , அவர்கள் நினைத்து பார்க்காமலே , சில மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன . அசாதாரண சாதனைகளைச் சாதிக்கும் ஆற்றல் பெற்று விடுகிறார்கள் நடக்கும்போது , அந்த மாற்றங்களைப் பயன்படுத்தி , அவர்கள் நம் மனது இருக்கிறதே . அது எல்லாவற்றையும் பதிவு கொள்ளும் நாம் படிப்பது , கேட்பது . நாம் அனுபவிப்பது எல்லாவற்றையும்தான் . இதை வைத்துக் கொண்டு தான் நம் உருவாக்கிக் கொண்டு வருகிறோம் . சில சமயம் பிறர் கருத்தையும் கேட்டு நம் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்கிறோம் கருத்துக்களிலும் , நம்பிக்கைகளிலும் இருந்து நம் பழக்கங்கள் உருவாகின்றன . நாளடைவில் நம் வாழ்க்கையின் பழக்க வழக்கங்கள் ஒரு வடிவம் பெற்று விடுகின்றன !

பழக்கம் எதுவாக இருந்தாலும் அதை மாற்ற நீங்கள் எப்போதாவது முயன்று பார்த்திருக்கிறீர்களா ? அது அவ்வளவு சுலபம் அல்ல ஏனென்றால் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பது கடினம் கடைப்பிடிப்பது சுலபம் . பழக்கத்தை நீங்கள் மாற்ற வேண்டுமானால் உங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் . பார்த்தீர்களா நாம் இப்போது எங்கே ஆரம்பித்தோமோ , அங்கேயே வந்துவிட்டோம் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒன்று வேண்டும் என்று விரும்பினால் , அதை அடைய முடியும் !

நான் சிறு வயதாக இருந்தபோதே , ஒரு பிஸினஸ்மேனாக வர ஆசைப்பட்டேன் . பார்க்கிறவர்கள் எல்லாரிடமும் நான் என் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பேன் . அப்போது , அவர்கள் எல்லாம் , நீ அப்படி எதுவும் செய்துவிட முடியாது ‘ என்றார்கள் நீ ரிஸ்க் எடுக்கமாட்டாய் ‘ வியாபாரமா ? அது உன் ரத்தத்திலேயே இல்லையே – நீ தோற்றுப் போய்விட்டால் சமாளித்துக் கொள்ள என்ன இருக்கிறது உன்னிடம் ? என்று இது மாதிரி நிறைய கேள்விகள் கேட்டார்கள் . இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பல லட்சங்கள் புழங்கும் வியாபாரத்தை இந்தஐந்து வருடங்களில் நடத்தி வந்திருக்கிறேன் . என் நம்பிக்கைகள் இன்னும் பலமாகவே இருக்கின்றன !

இந்தக் கடைசி சில வருடங்களாகத்தான் . புத்தகம் எழுதினால் அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் . ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் , ” அது ரொம்ப கஷ்டமான பிழைப்பு என்றோ , ” உன்னால் அதில் பணம் ஏதும் சம்பாதிக்க முடியாது ” என்றோ தான் சொன்னார்கள் . எனக்கு எழுதப் பிடிக்கும் . இன்றுவரை நான்கு புத்தகங்கள் எழுதிவிட்டேன் . வெகு நாட்களுக்கு முன்பே , நம்பிக்கை நம்மிடமிருந்துதான் கிளம்ப வேண்டும் . வெளியிலிருந்து அல்ல என்று தெரிந்து கொண்டேன் . முதல்படி , உங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்வதுதான் . தேர்வில் நிறைய மதிப்பெண்கள் தேற முடியும் என்று நீங்கள் திடமாக நம்ப வேண்டும் . உங்கள் நம்பிக்கை உங்களுக்குப் புதிய பலம் தரும்

இந்தச் செய்தியை உங்கள் மனம் உள்வாங்கிக் கொண்டு சற்று நேரத்துக்கு அதைச் சுற்றியே வந்துகொண்டிருக்கும் . அப்புறம் உங்கள் நம்பிக்கை தூண்டிவிடத் தூண்டிவிட , எது முடியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களோ , அது முடியும் , முடியும் ‘ என்று உங்கள் மனமே சொல்லத் தொடங்கும் . அதுவம் எப்படி ? அதிக மதிப்பெண்கள் , முதல் கிரேடுகளில் ! மனம் என்பது சாதாரண சக்தி அல்ல . அது நினைத்தால் எந்தச் சக்தி உங்களை உசுப்பிவிட வேண்டும் என்று தூண்டுகிறதோ , அதை உண்மையாகவே தூண்டிவிட்டு , வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும் !

Leave a Reply