மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் , என்ன செய்ய வேண்டும் ?

மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் , என்ன செய்ய வேண்டும் ? என்று ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் . ஒவ்வொரு நாளுக்கும் இதைத் தயார் செய்ய வேண்டும் . எதைச் செய்தோம் ? என்றும் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும் . செய்து முடித்த பணிகளுக்கு உங்களுக்குப் பரிசு கொடுத்து , முதுகைத் தட்டிக் கொடுக்க வேறு யாரும் தேவை இல்லை . நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளலாம் . இந்த முறை நிச்சயம் பிரமிப்பான பலன்கள் தரும் உடனேயே மாற்றங்கள் உண்டாகலாம் . நூலகத்துக்குப் போகவோ , நண்பர்களுடன் ஒரு தனியிடத்தில் போய் உட்கார்ந்து படிக்கவோ தீர்மானிக்கலாம் .

எனக்குத் தெரிந்த அளவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொறுப்புடனும் , பொறுமையுடனும் , தீவிரமாகப் படிக்க முன் வருகிறார்கள் . தினசரி வகுப்புகளுக்குப் போய் அமர்ந்து பாடங்களை முழுதுமாகக் கவனித்து தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள் . சிலர் பாடங்கள் சவாலாகவும் , சுவாரசியமாகவும் இருப்பதாகவே நினைக்கிறார்கள் . அதிக மதிப்பெண்களுக்காக அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளுகிறார்கள் . உண்மையில் , சில மாணவர்கள் படிப்புக்குத் தங்களையே அர்ப்பணம் செய்து கொள்கிறார்கள் .

பெரும்பாலானவர்கள் , இந்தத் தாமதப்படுத்தும் குணத்தை மெல்ல மெல்லத்தான் வெல்ல முடிகிறது . தேர்வுக்கு முந்தைய நாள் இரவு கொஞ்சம் படிப்பதை யாருமே பெரிய கஷ்டமாக நினைப்பதில்லை . ஆனால் தேர்வு எனப்படும் அழுத்தம் ஒன்றில்லாவிட்டால் , பல மாணவர்கள் படிக்கிற பழக்கத்தையே கைவிட்டு விடுவார்கள் . முன்பே குறிப்பிட்டபடி பெரிய பணிகளைச் சுமையாகக் கருதாமல் , சின்னச் சின்ன பணிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள் . நீங்கள் கையாளக்கூடிய எளிதான நிலையில் , அந்தப் பணிகளை ஆரம்பித்து விடுவது சுமையாகத் தெரியாது . ‘ இதை 5 நிமிடங்களிலேயே முடித்து விடுகிறேன் பார் ‘ என்று பணியை ஆரம்பித்துப் பாருங்கள் . பிறகு ஐந்து நிமிடங்கள் என்ன , பணி மும்மரத்தில் , நேரம் போவது தெரியாமல் நீங்கள் பாட்டுக்கு அதிலேயே மூழ்கிப்போய் விடுவீர்கள் ! விரைவிலேயே ஒரு பணியை ஆரம்பித்து , அதில் ஈடுபடுகிற குணம்தான் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது . அதாவது தாமதப்படுத்தும் இயல்பு கொண்டவர்கள் , பாடங்களைப் படிப்பதையும் , தேர்வுகாலப் பணிகளையும்

முன்னதாகவே தொடங்கிவிட வேண்டும் . தினசரி நிறையத் தடவைகள் படித்துப் பழக ஆரம்பியுங்கள் , உடற்பயிற்சி போலவே , இதையும் ஒரு சமயத்தில் துவங்கி , அதையே பழக்கத்திலும் கொண்டுவர இந்த ஒழுங்குமுறை நிச்சயம் கைகொடுக்கும் .

இன்னும் சில மாணவர்கள் வேறு வகையைச் சேர்ந்தவர்கள் . தொடர்பான தங்கள் எண்ணங்களையும் , உணர்வுகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் , அவ்வப்போது குறித்து வைத்து விடுவார்கள் . அவர்கள் பயம் , சால்ஜாப்புகள் , சவால்கள் , படிப்பைக் கவனிக்க முடியாமல் செய்யும் பிற பழக்கங்கள் எல்லாவற்றையும் அவர்களே கண்முன்னால் படித்துத் தெரிந்து கொள்ள இது உதவும் . இதைப் படிக்கையில் அவர்களுக்குள்ளேயே ஒரு தூண்டல் எழும் . இப்படி இருக்கக்கூடாது . இதை , இப்படிச் செய்ய வேண்டும் அல்லது இப்படிச் செய்திருக்க வேண்டும் என்ற துணிவு அவர்களுக்கே அப்போது உண்டாகும் . எதைச் செய்ய வேண்டுமோ , அதைச் செய்ய முனைவார்கள் . இன்னும் சிலர் , தங்கள் நண்பர்களைக் கொண்டே தங்களைக் கிண்டலடித்துத் தூண்டிவிடச் சொல்வார்கள் . ‘ காலை 7 மணிக்குள் நூலகத்துக்கு வராவிட்டால் , பத்து ரூபாய் அபராதம் ! ‘ என்று கூட நண்பர்கள் வேடிக்கைக்காக இவர்களுக்குத் ‘ தண்டனை ‘ விதிப்பது உண்டு .

ஆனால் மாணவருக்கு உண்மையிலேயே ‘ பிரஷர் அதிகமாக இருந்தால் , ‘ இன்னும் சற்றுக்கூட முயற்சி செய் ‘ என்பதோ , ‘ உன்னைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொள் என்பதோ , ‘ இது கொஞ்சம் சிரமமான காரியம்தான் . ஆனாலும் விட்டுவிடாதே ! ” என்பதோ , இந்த வேலை முடிகிறவரை நண்பர்களுடன் பேச்சு , சந்திப்பு , ஜாலியான இரட்டை எதுவும் கூடாது ! ‘ என்று கண்டிப்போ எதிர்விளைவையே கரும் . இப்படிப்பட்ட ஆலோசனைகள் இன்னும் பிரஷர் அல்லது படபடப்பை அதிகரிக்கச் செய்து , செய்ய வேண்டிய பணியின் மீது .வெறுப்பைத்தான் தூண்டுமே தவிர , முடிக்க வேண்டிய வேலையைச் செய்துமுடிக்க ஒரு விதத்திலும் உதவாது .

 

 

Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *