வெற்றி உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறது !!

வெற்றி உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறது !!

1998 குட்வில் கேம்ஸ் நடந்தபோது , மாரியன்ஜோன்ஸ் ஒலிம்பிக் – 2000 த்தில் , தான் ஐந்து தங்கப் பதக்கங்கள் வெல்லப் போவதும் அறிவித்தார் . மீடியா தன் மீது பார்வையைச் செலுத்த வேண்டும் என்ற நினைத்தாரோ என்னவோ ? அல்லது விளம்பர உத்தியோ ? இல்லை உண்மையிலேயே தன்னால் அப்படி ஒரு சாதனை புரிய முடியும் என்ற நம்பினாரோ ? ஆனால் அவர் தமது அறிவிப்பில் 100 மீட்டர் , 2017 மீட்டர் , லாங்ஜம்ப் , 4×100 மற்றும் 4×400 ரிலே ஓட்டங்களில் தாய் தங்கப் பதக்கங்களை வென்று காட்டப் போவதாக அறைகூவல் விடுத்தவர் .

இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை , ஃபேன்னி பிளாங்கர்ஸ் என்ற நெதர்லாந்துப் பெண்மணி மட்டும்தான் தாம் பங்கு எடுத்துக் கொண்ட ஒலிம்பிக் பந்தயத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று காட்டினார் அது எப்போது தெரியுமா ? 55 வருடங்களுக்கு முன் 1948 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ! ஃபிளாரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர் , 1988 ஒலிம்பிக் பந்தயத்தில் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்றார் . ஜோன்ஸ் 100 மற்றும் 200 மீட்டர் பந்தயங்களில் தங்கம் வென்றார் . 4 : 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார் . அவருடைய பிற குழு உறுப்பினர்கள் மெதுவாக ஓடி வந்து கை கொடுத்ததால் ஏற்பட்ட நீண்ட இடைவெளியை , அதிவேக ஓட்டத்தால்

கடந்து 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றார் . போதிய அளவு பயிற்சியை மேற்கொண்டிருந்தார் என்றால் , லாங் ஜம்ப்பிலும்கூட அவர் வெண்கலம் வென்றிருக்கக் கூடும் ஆறு ஜம்ப்களில் நாலு ஜம்ப்கள் தவறாகிப் போனதால் , 24 அடிக்கு மேல் தாண்டியும் பரிசு பெற இயலவில்லை ! அவரிடம் வேகம் இருந்தது . ஆனால் விவேகம் இருக்கவில்லை அதாவது ‘ டெக்னிக் ‘ எனப்படும் நுட்பத்தை அறிந்திருக்கவில்லை . மூன்று தங்கப்பதக்கங்களும் , இரண்டு வெண்கலப் பதக்கங்களும் என்று ஒரே ஒலிம்பிக்ஸில் பிறரைவிட அதிகப் பதக்கங்கள் பெற்றதால் அவர் வெற்றிகரமான விளையாட்டு வீரரா ?

இல்லை 1988 – க்குப் பிறகு எந்தப் பெண்மணியுமே பெறாத அளவுக்கு , மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்றதனால் அவர் வெற்றிகரமான விளையாட்டு வீரரா ? அதுதான் சாதிக்க வேண்டும் என்ற உந்து சக்தி . இந்த ஓர் அணுகுமுறையையே செம்மைப்படுத்தி , பயிற்சி மேற்கொண்டால் நாட்கள் பறக்கும் . படித்துச் சாதிக்க வேண்டும் என்ற அதீதமான உணர்வு உங்களுக்குள் உதயமாகும் . சரியாக எதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டுமோ , அதைப் படிப்பீர்கள் . குறைந்த காலத்தில் அதிகம் படிப்பீர்கள் . இந்த அணுகுமுறையைச் சீர்படுத்தி நீங்கள் முயற்சிகள் எடுக்கையில் , இது உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் . அவர்கள் உங்களை நம்புவார்கள் ; ஆதரிப்பார்கள் .

இந்த ஓர் அனுபவமே உங்கள் வாழ்க்கையையே செழுமையாக்க ஒரு மாறுதலாக அமைந்துவிடும் . நீங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டியது உங்கள் தீராத வேட்கையை . சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை ! இப்போது சொல்லுங்கள் , இந்த சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் உங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது ? 10 க்கு 5 ? 10 க்கு 6 ? 10 க்கு 8 ? அல்லது 10 க்கு 4 ? ‘ ‘ எல்லா தலைவர்களிடமும் சாதனை புரிய வேண்டும் என்ற துடிப்பும் அதற்கான காரணமும் வெளிப்படையாகத் தெரியும் என்று ரான்ஹப்பர்டு சொல்கிறார் .

வெற்றியோ , தோல்வியோ இரண்டுமே நம்பிக்கை சார்ந்தே இருக்கிறது . நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தீவிர நம்பிக்கை வைக்கிறபோது , அதுவே உண்மையாகிவிடுகிறது . நீங்கள் காணும் கனவெல்லாம் நனவாகிவிடுகிறது . செய்து முடித்துக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் , அதற்கு எப்படியாவது ஒரு வழி பிறக்கும் . நீங்கள் உண்மையாகவே எதைச் செய்தாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும்போது , உங்கள் உள் மனது அதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடித்து விடும் . அதுவே உங்களைத் தூண்டும் சக்தி . முக்கியமான பணி முடித்தாக வேண்டும் ; ஆனால் அது முடிந்தபாடில்லை அப்போது உங்கள் ஆர்வமும் , நம்பிக்கையும் மிகுந்த சக்தி பெற்று , நீங்கள் எதைச் செய்தாலும் அது சரியாகவே அமைந்துவிடும் அதனால் உங்கள் தன்னம்பிக்கையை இன்னும் அதிகம் பெருக்கிக் கொண்டு , வெற்றி காண முடியும் என்ற ஆழமான நம்பிக்கையில் உங்கள் நினைப்பைச் செலுத்துங்கள் . ‘ பாஸிடில் நினைப்புகள் வெற்றியையே எப்போதும் தரும் .

Leave a Reply